Letra Moongil Kaadugalae (From

Letra de Moongil Kaadugalae (From "Samurai")

Hariharan


Moongil Kaadugalae (From "Samurai")
Hariharan
(0 votos)
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

ஹோ... ஹோ...

மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூரச் சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து

மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

(music)

சேற்றுத் தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்
சேதம் வளர்ப்பதில்லை பூவின் ஜீவன் வளர்க்கிறது
வேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொறியும்

தாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபலியங்கள் காணேனோ
மரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ
வெயிலோ முயலோ பருகும் வண்ணம் வெள்ளை பனித்துளி ஆகேனோ

மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே

(Music)

உப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது
மலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே

மேகமாய் நானும் மாறேனோ
அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ என் ஜோதியில் உலகை ஆளேனோ
ஜனனம் மரணம் அரியா வண்ணம் நானும் மழை துளி ஆவேனோ

மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
இயற்கை தாயின் மடியில் பிரிந்து
எப்படி வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய் இருந்து
பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து

ஹோ...


Comparte Moongil Kaadugalae (From "Samurai")! con tus amigos.


Que tal te parece Moongil Kaadugalae (From "Samurai") de Hariharan?
Pesima
Mala
Regular
Buena
Excelente